முதல் முறை எம்.பி-யாக பதவியேற்றார் பிரியங்கா காந்தி!

 
priyanka

வயநாடு தொகுதியில் வெற்றி பெற்ற பிரியங்கா காந்தி, எம்.பியாக பதவியேற்றுக்கொண்டார். 

கேரளா வயநாடு மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி தனது முதல் தேர்தலில் சகோதரனின் சாதனையை முறியடித்தார். பல எதிர்பார்ப்புகளை மீறி அவர் வயநாட்டில் 4,10,931 (4 லட்சத்து 10 ஆயிரத்து 931) வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி கண்டுள்ளார். சிபிஐ வேட்பாளர் சத்யன் மொகேரி, பாஜக வேட்பாளர் நவ்யா ஹரிதாஸ் ஆகியோர் பெரும்பாலான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். 

இந்த நிலையில், கேரளாவின் வயநாடு மக்களவைத் தொகுதியின் இடைத்தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, பிரியங்கா காந்தி எம்.பி-யாக பதவியேற்றார். முதல் முறையாக எம்.பி-யாகிருக்கும் பிரியங்கா காந்தி, அரசியல் சாசன புத்தகத்தை கையில் ஏந்தி பதவியேற்றுக்கொண்டார். எம்.பியாக பதவியேற்று அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.