பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு

 
 பாதாள சாக்கடை திட்டத்தில் இனி தனியார் பங்களிப்பு

பாதாள சாக்கடை திட்டத்தை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ள டெண்டர் கோரியது தமிழக அரசு.


மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.  விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய டெண்டர் கோரியது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை. முதற்கட்டமாக நாகர்கோவில், மதுரை மாநகராட்சியில் பாதாள சாக்கடை பணிகளை தனியார் பங்களிப்புடன் மேற்கொள்வதற்கு திட்ட அறிக்கை கோரி டெண்டர் விடுக்கப்பட்டுள்ளது. 2 மாதத்தில் விரிவான திட்ட அறிக்கையை சமர்பித்து ஒப்புதல் பெறப்பட்ட பின் அடுத்த 3 மாதத்தில் ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டுள்ளது. தற்போது மாநகராட்சி, நகராட்சிகள் சார்பில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ.50,000 டெபாசிட் செலுத்தி இ டெண்டர் முறையில் விண்ணப்பிக்கலாம் என அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.