வேலை தேடுபவரா நீங்கள்? இதோ உங்களுக்கான முக்கிய அறிவிப்பு

 
tn

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை சார்பில் சென்னையில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

jobs

இதுதொடர்பாக தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையர் கொ.வீரராகவராவ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சென்னையில் அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையங்களும் இணைந்து நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன. இந்த முகாம் கிண்டியில் உள்ள ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் (தொழிற்பேட்டை பேருந்து நிலையம் அருகில்) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைபெறும்.

tn govt

இதில் 20-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்று பணியாளர்களைத் தேர்வுசெய்ய உள்ளன. இந்த முகாமில், 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை (ஐடிஐ, பாலிடெக்னிக் உட்பட) அனைவரும் கலந்துகொள்ளலாம். அனுமதி இலவசம். இந்த முகாம் வாயிலாக பணிநியமனம் பெறுவோரின் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படாது " என்று குறிப்பிட்டுள்ளார்.