சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி..

 
சென்னையில் பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி..

சென்னையில் மாநகர பேருந்துகளை இயக்க தனியாருக்கு அனுமதி கொடுக்க மாநகர் போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.  ‘Gross Cost Contract’ என்ற முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இத்திட்டத்தின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது!

 சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில்  சென்னையில் 600க்கு மேற்பட்ட மாநகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பொதுமக்கள் மற்றும் பயணிகள் வசதிக்காக  ஒருநாளைக்கு 3000க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகள்   இயக்கப்படுகிறது.  இந்நிலையில்  மாநகர போக்குவரத்து கழகம், பயணிகளின் வசதிக்காக,  தனியார் பங்களிப்புடன் கூடுதலாக  மாநகர பேருந்துகளை இயக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி  இந்த ஆண்டு 500 பேருந்துகளையும், 2025ம் ஆண்டு 500 பேருந்துகளையும் இத்திட்டத்தின் கீழ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

 மாநகரப் போக்குவரத்துக் கழகம்

கிராஸ் காஸ்ட் கான்ட்ராக்ட் என்ற முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாகவும்,  கிலோ மீட்டர் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யவும்  முடிவு செய்யப்பட்டுள்ளது.  இந்தத் திட்டம்  சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பயணிக்கும் பயணிகளின் சேவையை விரிவுபடுத்துவதற்கு பயனுள்ளதாக இருக்கும் என்றும்,  அதனடிப்படையிலேயே இந்தத் திட்டத்தை முன்னெடுத்துள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றன.