புதுச்சேரியில் டெங்குவால் தனியார் கல்லூரி மாணவி உயிரிழப்பு

 
டெங்கு பலி

புதுச்சேரியில் டெங்குவால் தனியார் கல்லூரி மாணவி  உயிரிழந்துள்ளார். இளம் பெண் உயிரிழப்புக்கு டெங்கு காரணமான என மறு பரிசோதனையிலும் புதுச்சேரி அரசு ஈடுபட்டுள்ளது. 

சென்னை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் வேகமாக பரவுகிறது டெங்கு காய்ச்சல்! – அதிர்ச்சி தகவல்

புதுச்சேரி அடுத்த  குரும்பாம்பேட்  ஹவுசிங் போர்டை சேர்ந்தவர் ஆதிமூலம்.  இவரது மகள் காயத்ரி. 19 வயதுடைய இவர் உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இன்று உயிரிழந்தார். தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதிக்கப்பட்டிருந்தபோது அவர் டெங்குவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக சான்றிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து டெங்கு பாதிப்பால் இளம் பெண் உயிர் இழந்ததது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இளம் பெண் உயிரிழப்புக்கு டெங்கு காரணமான என மறு பரிசோதனையிலும் புதுச்சேரி அரசு ஈடுபட்டுள்ளது. 

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மழை பெய்துவருவதால் டெங்கு காய்ச்சலும் பரவ தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து டெங்கு காய்ச்சலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மாநில அரசுகள் துரிதபடுத்தி உள்ளன.