சேலத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால் தனியார் கிளப் மதுக்கடைகளில் அலைமோதும் கூட்டம்
சேலத்தில் பணியாளர்களின் போராட்டத்தால் மூன்றாவது நாளாக மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளன. மது பிரியர்கள் ஆங்காங்கே அனுமதி பெற்று நடக்கும் மனமகிழ் ரெக்கரேசன் கிளப்புகளில் நீண்ட வரிசையில் நின்று மது பாட்டில்களை வாங்கிச் செல்வதால் பரபரப்பு ஏற்பட்டது.
10 ரூபாயே அதிகம்னு பாட்டு பாடுனாங்க... இப்ப 60 ரூபாயாம்...
— Manikandan Sankar (@reportermani) May 28, 2026
பாட்டிலிக்கு 10 ரூபாய் விவகாரம். சேலத்தில் மாவட்டம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளது
மனமகிழ் மன்றத்தில் குவாட்டருக்கு தற்போது 60 ரூபாய் அதிகமாக விற்கப்படுகிறது.
இதை வாங்க இவ்வளவு பெரிய வரிசை
பாவம்#tasmac… pic.twitter.com/IJP5dn7TQM
காலி மது பாட்டில்கள் வாங்கும் விவகாரத்தில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு இடையே ஆன பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டாதால் மூன்றாவது நாளாக இன்று அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டுள்ளது.
இதனால் மதுபான பிரியர்கள் மது பாட்டில்கள் வாங்க முடியாமல் திணறி விடுகின்றனர் இந்த நிலையில் சேலத்தில் எஃப் எல் டு அனுமதி பெற்ற மனமகிழ் மன்றங்கள் ஆன தனியார் மதுபான கூடங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இதனால் மதுபான பிரியர்கள் நீண்ட வரிசையில் நின்று தனியார் அனுமதி பெற்று நடத்தும் மதுபானக்கூடங்களில் மது பாட்டில்களை வாங்கிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது..
நீண்ட வரிசையில் நின்று கூடுதல் விலைக்கு மது பாட்டில்களை வாங்கி செல்கின்றனர்..

