சேலத்தில் தனியார் நகர பேருந்துகள் கட்டணம் உயர்வு

 
சேலத்தில் தனியார் நகர பேருந்துகள் கட்டணம் உயர்வு

சேலத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றி தனியார் நகர பேருந்துகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலத்தில் எவ்வித முன் அறிவிப்புமின்றி தனியார் நகர பேருந்துகள் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 50 கி.மீ.தூரம் செல்லக்கூடிய தனியார் பேருந்து கட்டணத்தை ரூ.7- ரூ.12 வரை உரிமையாளர்கள் உயர்த்தி உள்ளனர். தனியார் நகர பேருந்துகளில் ஏற்றிவரும் காய்கறி கூடைகளுக்கு கூடுதல் கட்டணம் வசூல் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய தனியார் பஸ் கட்டணம் உயர்வால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உதாரணமாக அரூர் - சேலம் அரசு பேருந்தில் 44 ரூபாய் மட்டுமே ஆனால் தனியார் பேருந்துகளில் 50 ரூபாய் வசூல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரியைத் தொடர்ந்து திருவண்ணாமலையிலும் தனியார் நகர பேருந்துகளின் கட்டணம் முன்னறிவிப்பின்றி ஏற்றப்பட்டுள்ளது. ரூ.5 முதல் ரூ.19 வரை உயர்த்தப்பட்டுள்ள இ்ந்த கட்டண உயர்வை திரும்பப் பெற பொதுமக்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.