இன்று நடைபெறவிருந்த தனியார் பேருந்து ஸ்ட்ரைக் திடீர் தள்ளிவைப்பு..!
'கடந்த எட்டு ஆண்டுகளாக பஸ் கட்டணம் உயர்த்தப்படாதது, மகளிர் இலவச பயண அறிவிப்பு போன்றவற்றால், தனியார் பஸ் தொழில் முடங்கும் நிலை எற்பட்டுள்ளது. 'எனவே, பஸ் கட்டணத்தை உயர்த்த வலியுறுத்தி, இன்று (செப் 30) ஒரு நாள் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம் நடக்க உள்ளது' என, தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர் கள் சம்மேளனத் தலைவர் கே.தங்கராஜ் அறிவித்தார்.தற்போது கோரிக்கையை பரிசீலிப்பதாக தமிழக அரசு உறுதி கூறிய நிலையில் ஸ்டிரைக் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழ்நாடு தனியார் பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் தங்கராஜ் நேற்று (செப் 29) வெளியிட்ட அறிக்கை: எங்களது பேட்டி மற்றும் எங்களது கோரிக்கைகளை ஊடகங்கள் வாயிலாக பொது மக்களுக்கு கொண்டு சென்றமைக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.தமிழக அரசின் வருவாய்த்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் தொடர்பு கொண்டு எங்களது முக்கிய கோரிக்கைகளை பரிசீலிப்பதாக உறுதி அளித்த வகையில் இன்று (செப் 30) நாங்கள் அறிவித்துள்ள ஒரு நாள் வேலை நிறுத்தத்தை ஒத்திவைப்பது என்று முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு தங்கராஜ் கூறியுள்ளார்.

