சேலத்தில் தனியார் நகர பேருந்து கட்டணம் எவ்வித முன் அறிவிப்புமின்றி உயர்வு..!!
Aug 15, 2026, 21:41 IST1786810311979
சேலத்தில் இருந்து இயங்கக்கூடிய சுமார் 50 கி.மீ. தொலைவு வரையிலான எல்லைகளைக் கொண்ட தனியார் நகரப் பேருந்துகளில், பேருந்து உரிமையாளர்கள் தன்னிச்சையாகக் கட்டணத்தை உயர்த்தியுள்ளனர். இதன்படி பயணக் கட்டணம் ரூ.7 முதல் ரூ.12 வரை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும், சேலத்தில் இருந்து அருகில் உள்ள பிற வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் தனியார் பேருந்துகளிலும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதால், தினசரிப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கட்டண உயர்வு மட்டுமின்றி, கிராமப்புறங்களில் இருந்து சேலம் நகருக்குத் தனியார் பேருந்துகளில் கொண்டு வரப்படும் காய்கறி கூடைகளுக்கும் வழக்கத்திற்கு மாறாகக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாகப் பயணிகள் மற்றும் சிறு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

