பிரதமர் வருகை - ராமேஸ்வரத்தில் கட்டுப்பாடுகள் விதிப்பு

 
modi

3 நாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி சென்னை, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். சென்னையில் இன்று மாலை கேலோ இந்தியா இளையோருக்கான விளையாட்டுப் போட்டியை தொடங்கி வைக்கிறார். நாளை காலை திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்.  நாளை மாலை ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு இரவு அங்கேயே தங்குகிறார். 

Modi
நாளை மறுதினம் தனுஷ்கோடி சென்று கோதண்டசாமி கோயிலில் வழிபாடு செய்கிறார். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அத்துடன் ட்ரோன்கள், ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் பிரதமர் மோடி ராமேஸ்வரம் செல்லும் நிலையில் தீவுப்பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.  ராமநாதசுவாமி கோயிலில் நாளை காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை தரிசனத்திற்கு தடை விதிப்பு.

நாளை பகல் 12 மணி முதல் 2.30 மணி வரை ராமநாதபுரத்தில் இருந்து ராமேஸ்வரத்திற்கு போக்குவரத்து தடை

modi

நாளை பகல் 12 மணி முதல் நாளை மறுநாள் பகல் 12 மணி வரை தனுஷ்கோடிக்கு போக்குவரத்து தடை

நாளை மறுநாள் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை ராமேஸ்வரம் நகர் பகுதியில் போக்குவரத்திற்கு தடை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.