பிரதமர் வருகை - சேலத்தில் விமானங்கள் ரத்து

 
modi

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தேர்தல் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.  மோடி நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பிரச்சாரத்தை செய்து வருகிறார். தமிழகத்தை பொறுத்தவரை திருப்பூர், சென்னை ,நெல்லை , கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பிரதமர் மோடி பிரச்சார பொது கூட்டங்களில் கலந்து கொண்டார் இந்த சூழலில் நாடாளுமன்ற தேர்தல் தேதி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு நேற்று தமிழகம் வந்திருந்த பிரதமர் மோடி கோவையில் பிரம்மாண்ட வாகன அணி வகுப்பில் பங்கேற்றார்

modi
இந்நிலையில் கோவையில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு புறப்பட்டார் பிரதமர் மோடி.  கோவை அரசினர் விருந்தினர் மாளிகையில் இருந்து கார் மூலம் விமான நிலையம் செல்கிறார் பிரதமர்; விமான நிலையத்தில் இருந்து பிரதமர் ஹெலிகாப்டர் மூலம் பாலக்காடு செல்கிறார். 

modi

பிரதமர் வருகையையொட்டி சேலத்தில் காலை 10 மணிக்கு மேல் விமான போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது. காலை 11 மணிக்கு மேல் பார்வையாளர் உட்பட அனைவருக்கும் சேலம் விமான நிலையத்தில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. 
பாலக்காட்டில் இருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் சேலத்திற்கு வருகை புரியும் பிரதமர்,  ஓமலூர் கமலாபுரம் விமான நிலையத்திற்கு வருகை புரிந்து அங்கிருந்து பாஜக பிரச்சார பொது கூட்டம் நடைபெறும் சேலம் கெஜ்ஜல்நாயக்கன்பட்டிக்கு வருகை புரிகிறார்.  மதியம் ஒரு மணி அளவில் சேலம், நாமக்கல் , கரூர் நாடாளுமன்ற தொகுதி பாரதிய ஜனதா சார்பில் நடக்கும் தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் கலந்து கொள்ளும் அவர்,  பின்னர் பாஜக கூட்டணி கட்சி தலைவர்களை சந்திப்பார் என்று கூறப்படுகிறது.