பிரதமர் வீடு கட்டும் திட்டம் - ரூ.209 கோடி ஒதுக்கீடு
ஊரகப் பகுதிகளில் செயல்படுத்தப்படும் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு முதல் தவணையாக 209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
ஒன்றிய மற்றும் மாநில அரசு பங்களிப்புடன் ஊரக மற்றும் நகரப்புறங்களில் வசிக்கும் ஏழைகளுக்கு வீட்டு வசதி ஏற்படுத்தி தரும் வகையில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஊரகப் பகுதிகளில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் 2024 - 2025 ஆம் ஆண்டில் 68,569 வீடுகள் கட்ட முதல் தவணையாக 209 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.
இதன்படி, ஒரு வீட்டுக்கு 1.20 லட்சம் என்ற அடிப்படையில் முதல் தவணையாக 209 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய அரசின் பங்கு 125 கோடி மற்றும் மாநில அரசின் பங்குத் தொகை 83 கோடி என்று மொத்தம் 209 கோடி ஒதுக்கீடு செய்து ஊரக வளர்ச்சிதுறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.