கொல்கத்தாவில் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டம்: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு!

 
1

சர்வதேச யோகா நாளை ஆண்டுதோறும் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தினார். இதுதொடர்பாக 2014ம் ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, ஐக்கிய நாடுகள் சபையில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டார்.

அமெரிக்கா, கனடா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பிரதமர் நரேந்திர மோடியின் பரிந்துரையை ஆதரித்தன.

2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி, 193 உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது ஜூன் 21ம் நாளை சர்வதேச யோகா நாளாக அறிவிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியது.

இதையடுத்து, கடந்த ஆண்டு ஜூன் 21ம் தேதி, முதலாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில் உலகின் பல நாடுகளிலும் யோகா பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.

உலகம் முழுவதும் இன்று சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்தியா உட்பட 135க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிலையில் கொல்கத்தாவில் நடைபெறவுள்ள 12வது சர்வதேச யோகா தினம் கொண்டாட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குவார் என அறிவிக்கப்பட்டுள்ளது 

யோகா தினம் முன்னிட்டு மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்தின் யோகா சங்கம் சார்பாக பிரதமர் மோடியுடன் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் யோகா.நிகழ்த்த திட்டமிடப்பட்டு உள்ளது.இதில் பங்கேற்பதற்காக பல்வேறு இடங்களில் பங்கேற்பாளர்கள் திரட்டப்பட்டு வருகின்றனர். இதற்காக அமைப்புகள், நிறுவனங்கள் yoga.ayush.gov. ர் in yoga-sangam என்ற இணையதளத்தில் தங்களது யோகா சங்கம் நிகழ்வுகளை பதிவு செய்யுமாறு ஆயுஷ் அமைச்சகம்' அழைப்பு விடுத்திருந்தது.

இதையொட்டி இணைய தளத்தில் பதிவுகள் அதிகரித்து உள்ளன. நாடு முழுவதிலும் இருந்து பள்ளிகள், கல்லூரிகள், அரசு அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் சமூகக் குழுக்கள், பிரதமர் தலைமையிலான யோகா கொண்டாட்டத்தில் பங்கேற்க ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றன. இந்தியா முழுவதும் 778 மாவட்டங்களை உள்ளடக்கி, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் பல்வேறு அமைப்புகள் பதிவு செய்துள்ளன. இந்த பதிவுகளில், 3.22 லட்சத்திற்கும் மேற்பட்ட 2 அரசு நிறுவனங்கள், 2 லட்சம் கல்வி நிறுவனங்கள், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள், 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற பிரிவுகளைச் சேர்ந்த சுமார் 44 ஆயிரம் அமைப்புகள் பங்கேற்றுள்ளன.