புதிய சாதனை படைத்தார் பிரதமர் மோடி..!
தற்போதைய தொழில்நுட்ப காலத்தில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளம் பயன்பாடு ஒரு முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவிட்டது
. 2014ம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் மோடி, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார்.தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 10 கோடி பாலோவர்ஸ்-ஐ கடந்த முதல் அரசியல்வாதி என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார்.
அதேபோல், அமெரிக்க அதிபர் டிரம்ப் 43.2 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தையும், இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 15 மில்லியனுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். பிரேசில் அதிபர் 14.4 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் நான்காவது இடத்தையும், துருக்கிய அதிபர் தையிப் எர்டோகன் 11.6 மில்லியனுடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். கடைசியாக, அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேய் 6.4 மில்லியன் பின்தொடர்பவர்களைக் கொண்டுள்ளனர்.
இந்தியாவிலும், பிரதமர் மோடி மற்ற அரசியல்வாதிகளை விட அதிகமானோர் பாலோவ் செய்கின்றனர். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 16.1 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் எம்.பி.யும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் 12.6 மில்லியன் பின்தொடர்பவர்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

