இயக்குனர் இமயம் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்..!
இயக்குனர் இமயம் என்று அழைக்கப்பட்ட பாரதிராஜா உடல் நலக்குறைவு காரணமாக நேற்று உயிரிழந்தார். பாரதிராஜாவின் உடல் நேற்று இரவு 9 மணி வரை நீலாங்கரை இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அவரது சொந்த ஊரான தேனிக்கு எடுத்து செல்லப்பட்டது.
இன்று அவரது உடலுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டு, அரசு மரியாதையுடன் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
இந்நிலையில் தற்போது இயக்குனர் பாரதிராஜா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது: பாரதிராஜாவின் மறைவு மிகுந்த துயரத்தை அளிக்கிறது. தமிழ் சினிமாவை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரையுலகின் ஒரு மிகச்சிறந்த ஆளுமையாகத் திகழ்ந்தவர். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது. துயரத்தின் இந்த வேளையில், அவரது குடும்பத்தினருடனும் எனது எண்ணங்கள் உள்ளன.
ஓம் சாந்தி.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
திரு பாரதிராஜா அவர்களின் மறைவு பெரும் துயரத்தைத் தருகிறது. தமிழ்த் திரையுலகை மாற்றியமைத்த படைப்புகளை வழங்கிய அவர், திரைப்படத்துறையில் உச்சத்தைத் தொட்ட ஓர் ஆளுமையாகத் திகழ்ந்தார். குறிப்பாக, கிராமப்புற வாழ்க்கையை அவர் சித்தரித்த விதம் மிகவும் போற்றத்தக்கது. துயரமான இந்த வேளையில்,…
— Narendra Modi (@narendramodi) June 11, 2026

