பிப்.18ல் பிரதமர் மோடி தமிழகம் வருகை
Jan 30, 2024, 09:55 IST1706588732305
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் பாதயாத்திரையை கடந்த ஜூலை மாதம் தொடங்கினார். ஜூலை 28ஆம் தேதி தொடங்கப்பட்ட இந்த பாதயாத்திரையை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ராமேஸ்வரத்தில் தொடங்கி வைத்தார்.
அண்ணாமலை மேற்கொண்டு வந்த பாதயாத்திரை வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரை பாஜகவிற்கு பெரும் வாக்கு வங்கியை பெற்று தரும் என்று அண்ணாமலை தொடர்ந்து கூறி வருகிறார்.
இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி தமிழகம் வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.