பிரதமர் மோடி கோவை வருகை - பிரமாண்ட வாகனப் பேரணியில் பங்கேற்பு

 
modi

மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது தமிழகத்தில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.

modi

 பாஜக 3 ஆவது முறையாக ஆட்சியை பிடிக்க பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். அதன்படி இன்று மாலை 4.35 மணிக்கு கர்நாடக மாநிலம் ஷிவமொக்கா விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு கோவை வந்தடைகிறார் பிரதமர் மோடி. 

modi

இந்நிலையில்  இன்று மாலை 5.30 மணிக்கு கோவை வருகை தரும் பிரதமர் மோடி, பிரமாண்ட வாகனப் பேரணியில் பங்கேற்க உள்ளார்; பேரணியை முன்னிட்டு கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சாய்பாபா காலனியில் இருந்து தொடங்கும் வாகனப் பேரணி, கங்கா மருத்துவமனை, வடகோவை, சிந்தாமணி வழியாக ஆர்.எஸ்.புரத்தில் நிறைவடைகிறது.