பிரதமர் மோடி வருகை எதிரொலி - காவல்துறை முக்கிய அறிவிப்பு

 
மோடி மோடி

விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய திறப்பு விழாவுக்காக நாளை பிரதமர் மோடி தூத்துக்குடி வரவுள்ளார்.

பிரதமர் மோடியின் திருப்பூர் வருகை ரத்து | pm modi visit to tirupur  cancelled - hindutamil.in

பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நாளை தமிழகம் வருகிறார். தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பிரதமர் நாளை இரவு 10:30 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வருகிறார். திருச்சி விமான நிலையத்திற்கு வந்திறங்கும் பிரதமர் நாளை இரவு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்க உள்ளார். ஓய்வுக்கு பின் மறுநாள் 27 ஆம் தேதி காலை மீண்டும் திருச்சி விமான நிலையம் சென்று அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்டு கங்கைகொண்ட சோழபுரம் சென்று அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். பிரதமர் வருகைக்காக திருச்சி மாவட்டத்தில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலைய திறப்பு விழாவுக்காக நாளை பிரதமர் மோடி தூத்துக்குடி வரவுள்ளார். ஆகவே 26.07.2025 மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை, தூத்துக்குடி, நெல்லை வழியே செல்ல கனரக, சரக்கு வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. வாகைகுளம் விமான நிலையத்தை கடந்து செல்ல கனரக, சரக்கு வாகனங்களுக்கு அனுமதி கிடையாது என்றும், மாற்று ஏற்பாடாக மங்களகிரி விலக்கில் வலது புறமாக போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது என்றும் காவல்துறை அறிவித்துள்ளது. நிகழ்ச்சிக்கு வருகை தரும் மிக முக்கிய நபர்களின் வாகனங்ளை தவிர மற்ற எந்த வாகனங்களுக்கும் விமான நிலையத்தின் உள்ளே அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.