ராமநாதசுவாமி கோவிலில் தரையில் அமர்ந்து பிரதமர் மோடி சாமி தரிசனம்

 
MODI

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இராமநாதசுவாமி கோவிலில் தரையில் அமர்ந்து சாமி தரிசனம்.செய்தார்.

இந்திய பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் தரையில் அமர்ந்து சாமி தரிசனம் செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் ரயில்வே தூக்கு பாலத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ராமேஸ்வரம் ராமநாதசுவாமி திருக்கோயில் சாமி தரிசனம் செய்தார் கோவில் நிர்வாகம் சார்பில் பூர்ண கும்ப மரியாதை வழங்கப்பட்டது, சாமி தரிசனத்தின் போது மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் முருகன் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

கோவிலுக்குள் கருவறை முன்பாக தரையில் அமர்ந்து பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார். இந்திய பிரதமர் மோடியின் சாமி தரிசனத்தை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் இன்று காலை எட்டு மணி முதல் மூன்று மணி வரை பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

-----