பிரதமர் மோடி இன்று ஸ்ரீரங்கம் செல்கிறார்

 
tn

சென்னை நேரு விளையாட்டு மைதானத்தில் கேலோ இந்தியா போட்டிகளை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், “2024 ஆம் ஆண்டில் விளையாட்டுத் துறைக்கு சிறப்பான தொடக்கமாக கேலோ இந்தியா விளையாட்டு அமைந்துள்ளது.

modi

தமிழ்மொழி மற்றும் தமிழ்நாட்டின் கலாச்சாரம் சொந்த ஊரில் இருப்பது போன்ற உணர்வை தரும். சென்னை வந்தது சொந்த ஊருக்கு வந்ததுபோல இருக்கிறது. விளையாட்டுத் துறையில் சாம்பியன்களை உருவாக்கும் பூமியாக தமிழ்நாடு திகழ்கிறது என்றார். 

modi
இந்நிலையில் 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோயில்களில் இன்று வழிபாடு நடத்துகிறார். காலை 11 மணிமுதல் 12.40 வரை ஸ்ரீரங்கம் கோயிலில் சாமி தரிசனம்  மேற்கொள்கிறார். மதியம் 2 மணிக்கு ராமேஸ்வரத்துக்கு செல்லும் பிரதமர் மோடி ராமநாதசாமி கோயிலில் வழிபாடு செய்தபின் இன்று இரவு அங்கு தங்குகிறார்.  தனுஷ்கோடி அரிச்சல் முனை, கோதண்டராமசாமி கோயில்களுக்கும் நாளை செல்கிறார்.