அடுத்த மாதம் மீண்டும் தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி
Updated: Jul 30, 2025, 20:07 IST1753886231830
ஆகஸ்ட் இறுதியில் பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகிறார்.

ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி. வரும் ஆகஸ்ட் மாதம் 26 ஆம் தேதி மற்றும் செப்டம்பரம் இறுதியிலும் பிரதமர் மோடி தமிழ்நாடு வரவுள்ளார். சிதம்பரம், கடலூர், திருவண்ணாமலை ஆகிய பகுதிகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ளவுள்ளார். நடராஜர் கோயிலில் இருந்து மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார்.
அண்மையில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உலக பிரசித்தி பெற்ற கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் நடைபெறும் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஆடி திருவாதிரை விழாவில் கலந்து கொள்ள பிரதமர் மோடி தமிழகம் வந்தார்.


