மெட்ரோ ரயிலை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

 
மெட்ரோ ரயிலை தொடங்கிவைத்தார் பிரதமர் மோடி

 

சென்னை மெட்ரோ இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.

 

பிரதமர் மோடியின் இந்த வருகையை முன்னிட்டு சென்னையில் ஐந்தடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 11 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் விஜய் நேரில் சென்று மலர்க்கொத்து கொடுத்து வரவேற்றார்.

பின்னர் சென்னை போரூர் புறவழிச்சாலை மெட்ரோ ரயில் நிலையத்தில் ரயில் சேவையை பிரதமர் மோடியும், விஜயும்  தொடங்கி வைத்தனர். பின்னர் மெட்ரோ பணிகள் குறித்து அங்குள்ள அதிகாரிகளிடம் பிரதமர் மோடி  கேட்டறிந்தார். மெட்ரோ ரயிலில் பயணம் மேற்கொண்டார்.