திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி

 
tn

திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி சாமி தரிசனம் மேற்கொண்டார்.

tn

தமிழகத்துக்கு 3 நாள் பயணமாக நேற்று வந்த பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஸ்ரீரங்கம் கோயிலில் மூலவரை தரிசனம் செய்தார் பிரதமர் மோடி. கருடாழ்வார் சன்னதியிலும் சாமி தரிசனம் செய்தார். சக்கரத்தாழ்வார், பட்டாபிராமர் சன்னதிகளிலும் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்கிறார். ரங்கா ரங்கா கோபுரத்திற்கு முன்பு கோயில் அர்ச்சகர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்றனர். 

tn

திருச்சி ஸ்ரீ ரங்கம் கோயிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்த நிலையில், பிற்பகல் 3.30 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியில்லை. பிரதமர் வருகையையொட்டி, . கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. யாத்ரி நிவாஸ் முதல் ஸ்ரீரங்கம் கோயில் வரை 5 அடுக்குபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.