தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி
Apr 6, 2025, 12:23 IST1743922398752

இலங்கை பயணத்தை முடித்துகொண்டு தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி.
நான்கு நாள் நிகழ்ச்சியாக பிரதமர் மோடி தாய்லாந்து, இந்தோனேசியா, இலங்கை பயணங்களை முடித்துகொண்டு இலங்கையில் இருந்து, ஹெலிகாப்டர் மூலம் தமிழகம் வந்தடைந்தார் பிரதமர் மோடி. அவரை ஆளுநர் ரவி, அமைச்சர் தங்கம் தென்னரசு, ராஜ கண்ணப்பன், மத்திய இணையமைச்சர் எல்.முருகன், நவாஸ்கனி எம்பி ராமநாதபுரம் ஆட்சியர் வரவேற்றனர். ஜி.கே.வாசன், நயினார் நாகேந்திரன், வானதி சீனிவாசன், ஹெச். ராஜா, தமிழிசை உள்ளிட்டோர் வரவேற்றனர்.
ராமேஸ்வரத்தில் புதிய பாம்பன் பாலம் திறப்பு விழாவிற்கு பிரதமர் மோடி வருகை புரிந்துள்ளார். முதலில் ராமநாதசுவாமி கோயிலிலும் பிரதமர் மோடி தரிசனம் செய்கிறார்.