சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

 
modi

கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார்.


கேலோ இந்தியா விளையட்டுப் போட்டிகளை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி 3 நாள் பயணமாக சென்னை வந்தடைந்தார். இன்று முதல் ஜனவரி 31 ஆம் தேதி கேலோ இந்தியா விளையட்டுப் போட்டி நடைபெறுகின்றன.

பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்த பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையார் தளத்திற்கு சென்றார். ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் இருந்து சிவானந்தா சாலை, வழியாக பிரதமர் மோடி நேரு விளையாட்டு அரங்கிற்கு வந்தடைந்தார். வழிநெடுகிலும், பொதுமக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கேலோ இந்தியா விளையட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்த பின்னர், இன்று இரவு ராஜ்பவனில் தங்குகிறார். இதைத் தொடர்ந்து நாளை காலை சென்னையில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு செல்லும் மோடி ஸ்ரீ ரங்கம் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்கிறார்.