கன்னியாகுமரியில் இன்று முதல் பிரதமர் மோடி தியானம்

 
ttt

கன்னியாகுமரி விவேகானந்தர்  மண்டபத்தில் இன்று தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி.

gg

மக்களவை தேர்தல் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வருகிற  ஜூன் 1-ம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன, 

இந்நிலையில்  கன்னியாகுமரி விவேகானந்தர் மண்டபத்தில் இன்று தியானம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி திருவனந்தபுரத்தில் இருந்து இன்று மாலை 4.35 மணிக்கு கன்னியாகுமரி செல்கிறார் பிரதமர்; பகவதியம்மன் கோயிலில் வழிபாட்டிற்கு பின் மாலை 6 மணி அளவில் விவேகானந்தர் மண்டபத்திற்குச் சென்று 3 நாட்கள் தியானத்தில் ஈடுபடவுள்ளார் பிரதமர் மோடி . பிரதமர் மோடி இன்றுமுதல் 3 நாட்கள், 45 மணி நேரத்துக்கு தொடர்ந்து தியானம் மேற்கொள்ளும் நிலையில் 3,000-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.