தமிழகத்தில் 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்!!

 
modi

தமிழ்நாட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்டுள்ள 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் திறந்து வைக்கிறார்.

modi

தமிழகத்தில் ரூ 4 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். பிரதமர் மோடி புதிதாக கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளை விருதுநகரில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டு திறந்துவைக்க உள்ளார் என அறிவிப்பு வெளியானது.  இருப்பினும் கொரோனா  காரணமாக மோடியின் தமிழக வருகையை ரத்து செய்யப்பட்டது . இதனால் டெல்லியில் இருந்து காணொலி காட்சி வாயிலாக புதிய மருத்துவ கல்லூரிகளை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்.

modi

விருதுநகர், நாமக்கல், நீலகிரி, திருப்பூர், திருவள்ளூர், நாகப்பட்டினம், திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, அரியலூர் ,ராமநாதபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் புதிதாக மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன.  புதிய 11 மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் ஆயிரத்து 450 இடங்கள் உள்ளன. அரசு அல்லது தனியார் மருத்துவக் கல்லூரி இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் நிறுவப்படும் முயற்சியாக இவை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சென்னையில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்துவைக்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார்.