BRICS மாநாட்டு பிரதிநிதிகளுக்கு பிரதமர் அளித்த பிரமாண்ட விருந்து; வைரலாகும் மெனு பட்டியல்!
.பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் முடிந்த பிறகு, வெளிநாட்டு தலைவர்களுக்கு பிரதமர் மோடியின் சார்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. இந்த விருந்தில் பங்கேற்க மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான், சர்பானந்த சோனோவால், அர்ஜுன் ராம் மேத்வால், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மஹாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் ஒரே பஸ்ஸில் ஒன்றாக பாரத் மண்டபத்திற்குச் சென்றனர்.
இந்த பிரம்மாண்ட விருந்தின் போது, இந்தியா மற்றும் பிற பிரிக்ஸ் நாடுகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட கலைஞர்களைக் கொண்ட குழுவினர் இணைந்து 'பிரிக்ஸ் சிம்பொனி கலை நிகழ்ச்சியை வழங்கினர்.
இந்த நிலையில், பிரதமர் அளிக்கு விருந்தின் மெனு பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், கண்ட்வி மில்லே-ஃபுய், கும்ப் கலௌட்டி, பனீர் லபாப்தார், சிறுதானிய புலாவ் உள்ளிட்ட பல்வேறு உணவுகளும், பாரம்பரிய இந்திய இனிப்புகளும் மெனுவில் இடம் பெற்றன. சிறுதானிய புலாவில் கம்பு, இந்திய ரொட்டியில் சோளம், இனிப்பில் குதிரைவாலி ஆகியவை இடம்பெற்றிருந்தன. பிரதான உணவுகளில் பனீர் லபாப்தார் உணவு வகை இடம்பெற்றிருந்தது.
இமயமலைப் பகுதியில் கிடைக்கும் 'மோரல்' காளான்கள் மற்றும் மென்மையான அஸ்பாரகஸ், குங்குமப்பூ, உலர் திராட்சை மற்றும் மாம்ரா பாதாம் ஆகியவற்றுடன் சமைக்கப்பட்ட குச்சி மார்மிக் உணவும் இடம் பெற்றது.
கேரட் பீன்ஸ் பொரியல், துவரம் பருப்பு, புதிய தக்காளி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தயாரிக்கப்பட்ட லேசான பருப்பு குழம்பான தக்காளி பெல்லே சாரு பரிமாறப்பட்டது.
மில்லெட் புலா, பீட்ரூட் ரைதா, ஜிலேபி, சாக்லேட் பழங்கள், மாதுளை ஜூஸ் மற்றும் இளநீர் ஆகியவையும் உணவு மெனுவில் இடம் பெற்றன. பிரிக்ஸ் மாநாட்டின் முதல் நாள் நிகழ்வுகள் முடிந்த பிறகு நடைபெற்ற உணவு விருந்தில், பிரதமர் மோடி மட்டுமின்றி, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், கிரண் ரிஜிஜூ, பியூஷ் கோயல், சிவராஜ் சிங் சவுகான், அர்ஜுன் ராம் மேத்வால் மற்றும் முதல்வர்கள் யோகி ஆதித்யநாத், தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.

