முருகன் சன்னதியில் பக்தர்கள் ஏற்றிய நெய் விளக்கை தண்ணீர் ஊற்றி அணைத்த அர்ச்சகர்

சென்னை திருவொற்றியூரில் பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன் கோயிலில், முருகன் சன்னதியில் பக்தர்கள் ஏற்றிய நெய் விளக்கில் தண்ணீர் ஊற்றிய அர்ச்சகரால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவொற்றியூரில் உள்ளது 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்த தியாகராஜ சுவாமி வடிவுடையம்மன். கோவிலில் செந்தூர் முருகன் சன்னதியில் செவ்வாய் கிழமையான இன்று பெண்கள் முருகன் முன்பு நெய் விளக்கேற்றி வழிப்பட்டனர். அப்பொழுது கோவில் குருக்கள் பாஸ்கர் என்பவர் பெண்கள் ஏற்றி வைத்த நெய் விளக்கில் கேனில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைத்தால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை கண்ட முருகனுக்கு விளக்கேற்றி வழிபட்ட பெண்கள், தண்ணீரை ஊற்றி அணைத்த குருக்கள் பெண் பக்தர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். பிரார்த்தனை செய்து ஏற்றப்பட்ட விளக்கில் தண்ணீர் ஊற்றுவது நியாயமா? என பாஸ்கர் என்ற அர்ச்சகரிடம், பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.