அமைச்சரிடமே லஞ்சம் கேட்ட அர்ச்சகர்! திருச்செந்தூரில் அடுத்தடுத்து அதிரடி ஆக்ஷன்..!

 
1

திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் இணைகமிஷனர் உதவிகமிஷனர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சாதாரண உடையில் முகத்திற்கு மாஸ்க் அணிந்து சென்ற அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷிடம் விரைவு தரிசனத்திற்கு அழைத்துச் செல்வதாக கூறி, ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அர்ச்சகர் சிக்கினார். அவருக்கு உடந்தையாக இருந்த இரு பாதுகாவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். பிறகு அதிகாரிகளுடன் அன்னதான கூடம் மற்றும் கோவிலில் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், தரிசனம் செய்ய கட்டாய வசூல், அடிப்படை வசதிகள் குறைவு என பக்தர்களின் தொடர் புகார் காரணமாகவும் அமைச்சர் ரமேஷ் திடீர் ஆய்வு காரணமாகவும் திருச்செந்துார் சுப்பிரமணியசுவாமி கோயில் இணைகமிஷனர் உதவிகமிஷனர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 

இது தொடர்பாக ஹிந்து சமய அறநிலையத்துறை கமிஷனர் வினய் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது:

1.திருவேற்காடு மாரியம்மன் கோவில் இணை கமிஷனர் அருணாச்சலம்- திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் இணை கமிஷனராகவும்
2. திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் இணை கமிஷனர் ராமு- திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோவில் இணை கமிஷனராகவும்
3. திருச்சி துணை கமிஷனர் மற்றும் சரிபார்ப்பு அலுவலர் யக்ஞநாராயணன்- திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் துணை கமிஷனராகவும்
4. திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் உதவி கமிஷனர் மெய்வேல்- மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உதவி கமிஷனராகவும்
5.மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் உதவி கமிஷனர் லோகநாதன்- திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி கோயில் உதவி கமிஷனராகவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 

இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.