ராக்கெட் வேகத்தில் விலை உயர்வு..! ரூ.500க்கு விற்ற ஒரு கட்டு வாழை இலை ரூ.5,500ஆக உயர்வு ..!

 
1

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி சந்தைப்பேட்டை மார்க்கெட்டில் வாழை இலை விலை 10 மடங்கு உயர்ந்துள்ளது. வாழை இலை வரத்து குறைந்துள்ள நிலையில், முகூர்த்த நாள் என்பதால் தேவை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் ஒரு கட்டு வாழை இலை ரூ.500க்கு விற்பனையான நிலையில், தற்போது ரூ.5,500க்கு விற்பனையாகிறது. சில்லறை விற்பனையில் ஒரு வாழை இலை ரூ.30 வரை விற்பனை செய்யப்படுகிறது. விலை உயர்வால் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சுபமுகூா்த்த தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், தொடா்ந்து புதன்கிழமை ஓணம் பண்டிகை வருவதாலும் வாழை இலையின் தேவை அதிகரித்துள்ளது.

வழக்கமாக ரூ.500 முதல் ரூ.600 வரை விற்பனையான

இலைக் கட்டு ரூ.5000 வரை விற்பனையானது. சிறிய அளவிலான (200 எண்ணம்) வாழை இலைக் கட்டு ரூ.3,000 முதல் ரூ.3,500 வரை,

பெரிய அளவிலான (200 எண்ணம்) வாழை இலைக் கட்டு ரூ.4,000 முதல் ரூ.5,500 வரை விற்பனை ஆனது.

இதனால் வாழை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.