இன்று முதல் அனைத்து வீட்டு உபயோகப் பொருட்களும் 8 சதவீதம் வரை விலை உயர்வு!
அக்டோபர் மாதம் 1ஆம் தேதி முதல் வீட்டு உபயோகப் பொருட்களின் விலை கிடுகிடு வென அதிகரிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி எல்டிஇ டிவி, வாஷிங்மெஷின், ஏசி, ப்ரிட்ஜ் உள்பட பிற வீட்டு உபயோகப் பொருட்களின் விலை குறைந்தபட்சம் 4 சதவீதம் முதல் அதிகபட்சமாக 8 சதவீதம் வரை உயரும் என்று அறிவிக்கப் பட்டுள்ளது.
அதன்படி ஏசியின் விலை 5 முதல் 8 சதவீதம் வரை கம்பெனி களைப் பொறுத்து உயர உள்ளது. எல்இடி டிவி, வாஷிங் மெஷின், ப்ரிட்ஜ் உள்ளிட்டவற்றின் விலை 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
தற்போது வரை ப்ளூ ஸ்டார், கோத்ரேஜ் அப்ளையன்ஸ், ஹையர், டெய்க்கின், சூப்பர் பிளாஸ்ட்ரோனிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்களின் பொருட்களின் விலையை குறைந்த பட்சம் 4 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை உயர்த்த உள்ளதாக ஏற்கெனவே அறிவித்துள்ளன. ‘பானசோனிக்’ நிறுவனம் இன்னும் விலை உயர்வை அறிவிக்காத நிலையில் விரைவில் அதுபற்றி அறிவிக்க உள்ளது.
இந்த விலையேற்றத்தின் பின்னணியில் முக்கிய விஷயம் உள்ளது. பணவீக்கம் காரணமாக விலை உயர்ந்து வரும் காப்பர், அலுமினியம், ஸ்டீல், போர் சூழலால் உயரும் கச்சா எண்ணெய் உபபொருட்கள் உள்ளிட்ட முக்கிய மூலப்பொருட்களின் விலை உயர்வு, அதிகரிக்கும் சரக்குக் கட்டணங்கள் உள்ளிட்டவற்றால் இந்த விலை உயர்வு தவிர்க்க முடியாது என்று தெரிவிக்கின்றனர்.
இந்த 2026ஆம் ஆண்டில் இதுவரை 2 முறை வீட்டு உபயோகப் பொருட்களின் விலைகள் ஏற்கெனவே உயர்ந்த நிலையில் தற்போது 3ஆவது முறையாக அதிகரிக்க உள்ளது. இந்த திடீர் விலை உயர்வால் பல டீலர்கள் அச்சமடைந்துள்ளனர்.

