#BREAKING மக்கள் பேரதிர்ச்சி! வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்வு

 
Gas

நாடு முழுவதும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூ.29 உயர்த்தப்பட்டுள்ளது.

வீட்டுப் பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மேலும் 29 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வால் சென்னையில் இதுவரை 928.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த சிலிண்டர் விலை, தற்போது 957.50 ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த மார்ச் மாதத்தில் 868.50 ரூபாயாக இருந்த விலை, மூன்றே மாதங்களில் 89 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மேற்காசியப் போர் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளதால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடுதான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என சொல்லப்படுகிறது. இதேபோல் 19 கிலோ எடைகொண்ட வணிக சிலிண்டரின் விலை மேலும் ரூ.46 அதிகரித்து ரூ.3,283க்கு விற்பனையாகிவருகிறது. சிஎன்ஜி ரூ.1 உயர்ந்து ஒரு கிலோ ரூ.96 ஆக உள்ளது.