கனிமவள கடத்தல் தடுப்பு- முதல்வர் விஜய் அதிரடி உத்தரவு
சென்னை தலைமை செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை மேற்கொண்டார். ஆய்வு கூட்டத்தில் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல் வழங்கிய முதலமைச்சர் விஜய், கனிமக் குத்தகைக்கு விடப்பட்ட குவாரிகளை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளார். குவாரிகளை கண்காணிக்கவும், கனிம வள கடத்தலை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்க விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றுவது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட விஜய், சட்டவிரோதமாக கனிமவள கடத்தலை தடுப்பதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது பற்றி விவாதித்தார். மேலும் கனிம வருவாயை பெருக்குவதற்கான பல்வேறு வழிமுறைகள் தொடர்பாகவும் முதல்வர் ஆலோசனை மேற்கொண்டதாக தெரிகிறது.
கனிமவள மேலாண்மையில் தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றும் வகையில், புவியியல் மற்றும் சுரங்கத் துறையானது கனிமவள ஆய்வினை அறிவியல் பூர்வமான முறையில் மேற்கொண்டு, சுற்றுச்சூழல் மற்றும் பொதுமக்களுக்கு உகந்த வகையில் அறிவியல் பூர்வமுறையில் ஆய்வுகளை மேற்கொள்ளவும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுற்றுச்சூழல் மற்றும் மக்களுக்கு உகந்த வகையில் கனிமங்களை அகழ்ந்தெடுப்பது குறித்தும், ட்ரோன் மூலம் கனிம அளவை துல்லியமாக தீர்மானிப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

