சென்னை மெட்ரோ ரயில் சுரங்க வழிப்பாதையில் மழைநீர் புகாதவாறு தடுப்பு நடவடிக்கை!!

 
metro

சென்னை மெட்ரோ இரயில் சுரங்க வழிபாதையில் மழைநீர் புகாதவாறு தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

metro

சென்னை மெட்ரோ இரயில் சுரங்க வழிபாதையில் கடந்த 2021-ஆம் ஆண்டு வடகிழக்கு பருவமழை காரணமாக மழைநீர் சுரங்க நடைபாதையில் தேங்கியது. மழைநீர் சுரங்க நடைபாதையில் செல்லாத வகையில் தற்போது தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், நடப்பு வடகிழக்கு பருவமழையின் போது கனமழையின் காரணமாக இதுபோன்று சுரங்க நடைபாதையில் மழைநீர் புகுந்தால் அதை கண்டறியப்பட்டு உடனடியாக தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

metro

கடந்த வடகிழக்கு பருவமழை காலத்தில் சைதாப்பேட்டை, அரசினர் தோட்டம், அண்ணா நகர் கிழக்கு, ஏ.ஜி-டி.எம்.எஸ், தண்டையார்பேட்டை , ஆயிரம் விளக்கு, தியாகராயா கல்லூரி ஆகிய 7 மெட்ரோ இரயில் நிலையங்களில் சுரங்க நடைப்பாதையில் மழைநீர் புகுந்தது. இதனால் மெட்ரோ பயணிகளுக்கு சிரமம் ஏற்பட்டது. இதனை அறிந்து 7 மெட்ரோ இரயில் நிலையங்களிலும் மழைநீர் புகாதவாறு தடுப்பு நடைவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாழ்வான சுரங்க நடைபாதையில் மழைநீர் உள்ளே செல்லாத வகையில் அலுமினிய தகட்டினால் தடுப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. வரும் வடகிழக்கு பருவமழை காரணமாக வேறு ஏதேனும் சென்னை மெட்ரோ இரயில் நிலையங்களில் மழைநீர் உட்புகுந்தால் அதனை கண்டறிந்து இதுபோன்ற தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.