ஈரானுக்கு அதிபர் டிரம்ப் மீண்டும் எச்சரிக்கை..!!
வாஷிங்டனில் நிருபர்களிடம் அதிபர் டிரம்ப் கூறியதாவது:
ஈரானுடனான மோதலை முடிவுக்குக் கொண்டுவரும் ஒப்பந்தம் விரைவில் எட்டப்படலாம்; அதற்கு முன்பாக, அந்த ஒப்பந்தத்தில் விரைவில் கையெழுத்திட வேண்டும்.
தவறினால் அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுக்கக்கூடும். கட்டாயமாக ஈரான் ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும்; தற்போது நடந்து வரும் பேச்சுவார்த்தைகள் தோல்வியுற்றால் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா கடுமையான நடவடிக்கை எடுக்கக்கூடும்.
ஈரான் விவகாரத்தில் நாம் இறுதிக் கட்டத்தில் இருக்கிறோம். இந்த நிலைமை முடிவடையலாம் அல்லது மேலும் மோசமடையலாம். நாங்கள் சற்று விரும்பத்தகாத சில காரியங்களைச் செய்வோம், ஆனால் அப்படி நடக்காது என்று நம்புகிறேன்.
நாம் சென்று இதை முடித்து வைக்கப் போகிறோமா அல்லது அவர்கள் ஓர் ஆவணத்தில் கையெழுத்திடப் போகிறார்களா என்பதுதான் ஒரே கேள்வி. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்.
இந்த விவகாரத்தில் நான் சொல்வதைத்தான் நெதன்யாகு செய்வார்.இதற்கிடையே அமெரிக்கா அல்லது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல் நடத்தினால், அது மோதலை விரிவுபடுத்தி, பேரழிவுகளை ஏற்படுத்தும் என்று ஈரானின் புரட்சிகரப் பாதுகாப்புப் படை எச்சரிக்கை விடுத்துள்ளது, குறிப்பிடத்தக்கது.

