#BREAKING தமிழ்நாடு உள்ளிட்ட 6 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்கள் நியமனம்
Updated: Oct 12, 2026, 21:31 IST1791820906450
தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பை கூடுதல் பொறுப்பாக கவனித்து வரும் ராஜேந்திர அர்லேக்கர், தமிழ்நாட்டின் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இந்தியக் குடியரசுத் தலைவர் குடியரசுத் தலைவர் புதிய ஆளுநர்களை நியமித்துள்ளார். கேரள ஆளுநராக இருந்த ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தற்போது அதிகாரப்பூர்வமாகத் தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். குடியரசுத் தலைவர் மாளிகை இதற்கான உத்தரவைப் பிறப்பித்துள்ளது.கேரளாவுக்கு புதிய ஆளுநராக ஓம் பிரகாஷ் மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.ஒடிசாவின் ஆளுநராக பிரஜ் மோகன் ராம், கர்நாடகாவின் ஆளுநராக டாக்டர் சுதா யாதவ், உத்தரகாண்டின் ஆளுநராக டாக்டர் தல் சிங் பிசென் மற்றும் சிக்கிமின் ஆளுநராக துஷ்யந்த் கௌதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

