முடிவுக்கு வந்த முரட்டு சிங்கிள் லைஃப்! தாலி கட்டியதும் மனைவிக்கு அன்பு முத்தம் கொடுத்த பிரேம்ஜி

 
பிரேம்ஜி

முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடான திருத்தணி முருகன் கோவிலில் இன்று காலை 9 மணி அளவில் இசையமைப்பாளர் கங்கை அமரன் மகனும் நடிகருமான பிரேம்ஜிக்கு திருமணம் நடைபெற்றது.


முன்னதாக  திருத்தணியில் உள்ள தனியார் ஹோட்டலில் கங்கை அமரன் மகன் பிரேம்ஜிக்கு நேற்று இரவு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விழாவில் பெண்ணின் உறவினர்கள் மற்றும் மணமகள் பிரேம்ஜியின் சகோதரர் இளையராஜாவின் மகன் கார்த்திக் ராஜா மற்றும் சென்னை 28 திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் என ஏராளமான கலந்து கொண்டனர். பின்னர் இன்னிசை கச்சேரியில் பிரேம்ஜி மற்றும் மணமகள் இணைந்து சினிமா பாடல் பாடி ஆடி மகிழ்ந்தனர்.

Image

தொடர்ந்து இன்று காலை  திருத்தணி மலைக்கோவிலில் உள்ள காவடி மண்டபத்தில் குடும்பத்தார் நண்பர்கள் முன்னிலையில் நடிகர் பிரேம்ஜிக்கு எளிமையாக திருமணம் நடைபெற்றது. தாலி கட்டியதும் மனைவிக்கு அன்பாக முத்தம் கொடுத்தார் பிரேம்ஜி.