அண்ணன் பிறந்தநாளில் திட்டமிட்டு கொலை - கைதானவர் வாக்குமூலம்

 
tt

சென்னை அடு்த்த செம்பியம் பகுதியை சேர்ந்தவர் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங். இவர் பெரம்பூரில் வீட்டின் அருகே இரு சக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருக்கும்போது அவரை பின் தொடர்ந்த, 6  பேர் கொண்ட மர்ம நபர்கள் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயமடைந்த பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங்கை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை கிரீம்ஸ் சாலை அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

tt

இந்நிலையில் அண்ணன் ஆற்காடு சுரேஷின் பிறந்தநாளில் திட்டமிட்டு கொலை செய்ததாக கைதான பாலா வாக்குமூலம் என தகவல் வெளியாகியுள்ளது.  "அண்ணனைக் கொன்றதோடு ஜெயபால், ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் எனக்கும் கொலை மிரட்டல் விடுத்தனர்; தொடர் கொலை மிரட்டல் வந்ததால், என் மனைவியே பயத்தில் என்னை பிரிந்துசென்றுவிட்டார்"  என்று புன்னை பாலா வாக்குமூலம் அளித்துள்ளார். பெரம்பூர் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரும் சரித்திர பதிவேடு குற்றவாளியுமான திருமலை ஆம்ஸ்ட்ராங் வீடு உள்ள பகுதியில் இருக்கும் பள்ளி அருகே ஆட்டோவை நிறுத்துவது போல ஒருவாரமாக நோட்டமிட்டு வந்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் அடிக்கடி தான் கட்டி வரும் வீட்டருகே குறைந்த அளவிலான நண்பர்களுடன் வருவதை நோட்டமிட்டு புன்னை பாலுவுக்கு தகவல் கொடுத்துள்ளார்.