“லோக்சபா தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணியை நாங்கள் ஒதுக்கி வைக்கிறோம்”- பிரேமலதா

 
“லோக்சபா தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணியை நாங்கள் ஒதுக்கி வைக்கிறோம்”- பிரேமலதா “லோக்சபா தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணியை நாங்கள் ஒதுக்கி வைக்கிறோம்”- பிரேமலதா

2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்யும் ஒரு தேர்தலாக இருக்கும் என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

Image


ஜனவரி 9ம் தேதி நடைபெற உள்ள மாநாட்டு பணிகள் குறித்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. மாநாட்டு பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தொண்டர்களை அழைத்து வருவது, மாநாட்டு ஏற்பாடுகள், சட்டமன்ற தேர்தலை சந்திப்பது, கூட்டணி குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கபட்டது. தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்று வாக்குப்பெட்டி வைத்து அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்களிடம் கருத்துக் கேட்டார் பிரேமலதா விஜயகாந்த்.

கூட்டத்துக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “ராஜ்ய சபா சீட் ஏற்கனவே பேசப்பட்டது, அது ஒருபுறம் இருக்கட்டும். எங்களுடைய கவனம் சட்டமன்ற தேர்தலை நோக்கிதான் இருக்கும். அனைத்து கட்சிகளும் எங்களுக்கு தோழமைக் கட்சிகள் தான், அனைவரும் தேமுதிகவுடன் கூட்டணி வைக்க விரும்புகிறார்கள், மாவட்ட செயலாளர்களின் கருத்தை பொறுத்து கூட்டணி அமையும். மாவட்டச் செயலாளர்களின் கருத்துகளை படித்த பின்பு கூட்டணி முடிவு செய்யப்படும். மாவட்ட செயலாளர்களின் ஒவ்வொரு வாக்குச்சீட்டையும் நானே எடுத்து பார்த்து நிர்வாகிகளின் முடிவுப்படி கூட்டணி அமைப்பேன். 2026 தேர்தல் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் நல்லது செய்யும் ஒரு தேர்தலாக இருக்கும். லோக்சபா தேர்தலின் போது ஏற்படுத்தப்பட்ட கூட்டணியை நாங்கள் ஒதுக்கி வைக்கிறோம், இன்று எங்கள் மாவட்ட செயலாளர்கள் தங்கள் விருப்பமான கூட்டணிக்கு வாக்களித்த கருத்துக் கணிப்பு நடத்தினோம். ஜனவரி 9 ஆம் தேதி முடிவுகளை அறிவிப்போம்” என்றார்.