“அண்ணனுக்காக அவரது சகோதரி நான் இங்க வந்திருக்கிறேன்”- ஸ்டாலினுக்காக வாக்கு சேகரித்த பிரேமலதா
கலைஞருக்கும் கேப்டனுக்குமான நட்பு 50 ஆண்டு நட்பு என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

கொளத்தூரில் மு.க.ஸ்டாலினுக்காக வாக்கு சேகரித்த பிரேமலதா விஜயகாந்த், “கலைஞருக்கும் கேப்டனுக்குமான நட்பு 50 ஆண்டு நட்பு. எங்கள் திருமணமே அவர் தலைமையில் தான் நடந்தது. அண்ணன் ஸ்டாலின் விருதுநகர்ல இருக்காரு.. அண்ணனுக்காக அவரது சகோதரி நான் இங்க வந்திருக்கிறேன்... சீப்பை எடுத்து மறைத்து வைத்தால் திருமணம் நின்றுவிடுமா.. ஆயிரம் கைகொண்டு மறைத்தாலும் ஆதவனை யாராலும் மறைக்க முடியாது. அவங்க ஃபிரிட்ஜ் தான் தராங்க.. இங்க 8000 ரூபாய் கூப்பன்.. என்ன வேணாலும் வாங்கிக்கலாம். அண்ணனின் வாக்குறுதியில் இதுதான் ஹைலைட். மகளிர் உரிமைத் தொகை 1,000 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக உயர்த்தப்படும். புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் தொகை 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.” என்றார்.

