“சத்தியம் வெல்லும், நாளை நமதே..!” என பிரேமலதா விஜயகாந்த் பதிவு

 
பிரேமலதா விஜயகாந்த்

“சத்தியம் வெல்லும், நாளை நமதே..!”- என விஜயகாந்த் எக்ஸ் தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Image

 

தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் வழங்குவதாக எப்போது சொன்னோம்? என எடப்பாடி பழனிசாமி இன்று சேலத்தில் பேட்டியளித்து இருந்த நிலையில் மறைந்த விஜயகாந்தின் எக்ஸ் தள பக்கத்தில், “சத்தியம் வெல்லும், நாளை நமதே..!” என பிரேமலதா விஜயகாந்த் பதிவிட்டுள்ளார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது கண்டிப்பாக கொடுத்தே ஆக வேண்டும் என பிரேமலதா கூறி வந்த நிலையில், தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி தருவதாக நாங்கள் கூறினோமா? யார் யாரோ சொல்வதை வைத்து கேள்வி எழுப்ப வேண்டாம். தேர்தல் அறிக்கையில் என்ன கூறினோமோ அதைப் பற்றி மட்டும் பேச வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி கூறினார்.