"என்னை நம்பி வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் என் இதயம் கனிந்த நன்றி"- பிரேமலதா விஜயகாந்த்

 
s

விருத்தாச்சலம் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

Image

இதுதொடர்பாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தளத்தில், “விருத்தாச்சலம் மக்களுக்கு என் மனமார்ந்த நன்றி! சட்டமன்றத் தேர்தல் 2026 இல், விருத்தாச்சலம் தொகுதியில் எனக்கு வழங்கிய மகத்தான வெற்றி உங்கள் அன்பும் நம்பிக்கையும் காட்டுகிறது. இந்த வெற்றி என் தனிப்பட்ட வெற்றி அல்ல – இது நம் அனைவரின் வெற்றி. என்னை நம்பி வாக்களித்த ஒவ்வொரு வாக்காளருக்கும் என் இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் பொறுப்புடன், உங்கள் குரலாக சட்டமன்றத்தில் செயல்பட உறுதியளிக்கிறேன்.விருத்தாச்சலம் வளர்ச்சி, மக்கள் நலன் – இதுவே என் முன்னுரிமை. முரசு கொட்டட்டும். விருதாச்சலத்தில் உங்கள் அண்ணியார் உங்களுக்காக உங்களுடன்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.