"ஜெயலலிதா என் ரோல் மாடல்" - பிரேமலதா விஜயகாந்த்

 
“ஒரு சூரியன், ஒரு சந்திரன் தான்,  ஒரு ஜெயலலிதா தான்” “ஒரு சூரியன், ஒரு சந்திரன் தான்,  ஒரு ஜெயலலிதா தான்”

சேலம் மாவட்டம் மேட்டூரில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ரத யாத்திரைப் பயணம் தொடங்கினார்.

Image

சுற்றுப்பயணத்தின்போது பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “எனக்கு ரோல் மாடல் ஜெயலலிதா அம்மையார் தான். ஒரு சூரியன், ஒரு சந்திரன் தான் என்பது போல் ஒரு எம்ஜிஆர், ஒரு ஜெயலலிதா, ஒரு கலைஞர், ஒரு கேப்டன். ஒரு பிரேமலதா விஜயகாந்த் தான். என் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. தமிழ்நாட்டில் பல சவால்களை சந்தித்த ஜெயலலிதா ஒரு சாதனை பெண்மணி, இரும்பு பெண்மணி. ஜெயலலிதா இடத்தை வேறு யாரும் நிரப்ப முடியாது. ஜெயலலிதா போன்று சிங்கப்பெண்ணாக நான் இருப்பதாக சுதீஷ் கூறியிருந்தார்” என்றார்.

முன்னதாக உள்ளம் தேடி இல்லம் நாடி’ பயணத்தில் மேட்டூர் சந்தையில் தொண்டர்களுக்கு தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் காய்கறி வாங்கி கொடுத்தார்.