“தம்பி நீ எழுந்தாதான் சண்டை வருது.. 8ம் தேதி வரை பேசாதே நீ!”- ஆதவ்-க்கு பிரேமலதா அட்வைஸ்

 
ச்

"‘தம்பி, நீ எழுந்தால்தான் சண்டையே ஆரம்பிக்கிறது' என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன் என தேமுதிக எம்.எல்.ஏ பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

சென்னை சட்டமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “நான் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டேன். நீங்கள் எழுந்து பேசத் தொடங்கினாலே சண்டைதான் வருகிறது. சொந்தப் பிரச்சினைகளுக்காக சட்டசபையை பயன்படுத்தக் கூடாது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் அவர்களது தொகுதி பிரச்சினைகள் குறித்து பேசவும், மக்கள் பிரச்சினைகள் குறித்து குரல் கொடுக்கவும் வாய்ப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தேன். வரும் 8ம் தேதி வரை அவர் பேச வேண்டாம். அமைதியாக சென்று கொண்டிருக்கும் சபை ஆதவ் அர்ஜுனா எழுந்தவுடன் சண்டையாக மாறி 4 மணி நேரம் அதிலேயே செலவாகிறது. உங்களுடைய தனிப்பட்ட நோக்கங்களை பொதுக்கூட்டங்கள் அல்லது செய்தியாளர் சந்திப்பில் பேசுங்கள். சட்டசபையில் பேசாதீர்கள். இதை சபாநாயகரிடம் வலியுறுத்தியுள்ளேன். மக்களுக்காக பேசுவதற்குதான் சட்டசபை. ஆனால் எப்போ பார்த்தாலும் சண்டை. சண்டை பற்றி பேசுவதற்கா இங்கு வந்துள்ளோம். இது சட்டமன்றம் கிடையாது, சண்டமன்றம். அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசாத வரை அமைதியாக செல்கிறது. அவர் பேச தொடங்கினால் சண்டையாக மாறுகிறது. எக்ஸாம்க்கு கூட இப்படி பிரிப்பேர் பண்ணி இருக்க மாட்டாங்க.. ராத்திரி பகலா பிரிப்பேர் பண்ணிட்டு இங்க வந்தா எப்போ பாத்தாலும் சண்டையாதான் இருக்கு.. இதுனால என்ன யூஸ்?.. நானும் பொறுமையா இருந்து பாத்துட்டேன்.” என்றார்.