“விவசாயிகளுக்கு முழுக் கடன் தள்ளுபடி இல்லாதது வருத்தம்”- பிரேமலதா விஜயகாந்த்

 
ச்

விவசாயிகளுக்கு முழுக் கடன் தள்ளுபடி இல்லாதது வருத்தமளிப்பதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.

பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “பட்ஜெட் செயல் வடிவம் பெற வேண்டும். அறிவிப்புகள் வெறும் சொல்லாக இல்லாமல் செயலாக இருக்க வேண்டும். வேளாண் கடன்கள் முழுமையாக ரத்து செய்யவில்லை. தமிழகத்தின் நீர் பாதுகாப்புக்கு எந்த திட்டமும் அறிவிக்கவில்லை. இளைஞர்களின் வேலைவாய்ப்பு பற்றி அறிவிப்பு இல்லை. 10 லட்சம் கோடி கடனில் இருந்து தமிழகத்தை மீட்க வேண்டும். தமிழகத்தின் கடனை குறைப்பதற்கு எந்த திட்டமும் இல்லை. கடனையும், வட்டியையும் குறைப்பதற்கான முயற்சிகள் குறித்த அறிவிப்பு இல்லாதது வருத்தமளிக்கிறது. சோலார், மின் பேருந்துகள் அறிவிப்புகள் வரவேற்கதக்கவை. ஏற்கனவே இருந்த பல திட்டங்களுக்கு பெயர் மாற்றப்பட்டுள்ளது. புதிய தொழிற்சாலைகள் குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் மின்சாரம் இல்லை, மின் கட்டண உயர்வுதான் இருக்கிறது” என்றார்.