“ஐபிஎல் நடக்குற கிரவுண்ட்ல போதைப்பொருள், பள்ளியில் டான்ஸ்... இதெல்லாம் அமைச்சர்கள் செய்யும் வேலையா?”- பிரேமலதா

 
“ஐபிஎல் நடக்குற கிரவுண்ட்ல போதைப்பொருள், பள்ளியில் டான்ஸ்... இதெல்லாம் அமைச்சர்கள் செய்யும் வேலையா?”- பிரேமலதா

டெல்லி சிறப்புப் பிரதிநிதியாக ஜனநாயகன் படத் தயாரிப்பாளர் கே.வெங்கட நாராயணா நியமிக்கப்பட்டது குறித்து கேள்விக்கு பதில் அளித்த தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, அமைச்சருக்கு நிகரான அரசு பதவிக்கு தமிநாட்டை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும் என்றார்.

விருத்தாசலத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேம்நாதா விஜயகாந்த் துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா, “ஒரு ipl நடக்குற ground லே வச்சு சரத்குமார் என்ற அமைச்சர் அப்படி பண்ணியிருந்தால் அது மிகவும் கண்டனத்துக்குரிய விஷயம்.. முதல்வர் பிறந்தநாளில் அரசு பள்ளியிலே போட்டோ மாட்டுவது, ரீலஸ் எடுப்பது,சினிமா பாடலுக்கு டான்ஸ் ஆடுவது.. அவளோ ஏன் அமைச்சர் அவர்களே டான்ஸ் ஆடுவது கண்டனத்துக்குரியது.. எதுக்கெடுத்தாலும் ஒரு 4 மாசத்துக்கு எதுவும் கேட்காதிங்கனு சொல்றாங்க.. ஆளும் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடந்துகொண்ட விதம் கொஞ்சமும் ஏற்புடையதாக இல்லை. சினிமா பாடலை போட்டு பள்ளிகளில் ஆடுவது மாணவர்களின் கல்வியை பாதிக்கும். ஆகவே பொறுப்புணர்வோடு செயல்பட வேண்டும். அமைச்சருக்கு நிகரான அரசு பதவிக்கு தமிநாட்டை சேர்ந்த ஒருவரை நியமிக்க வேண்டும்” என்றார்.