“தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை” - பிரேமலதா விஜயகாந்த்
தவெக அரசு அறிவித்தபடி டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம்சாட்டியுள்ளார்.
விருத்தாசலம் சட்டமன்ற அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தவெக அரசு அறிவித்தபடி இன்னும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. என்னுடைய விருத்தாசலம் தொகுதி முழுவதும் சுற்றிப் பார்த்துவிட்டேன். எங்கும் டாஸ்மாக் கடைகள் மூடப்படவில்லை. முதல்வர் அறிவித்தது போல் 717 டாஸ்மாக் கடைகள் உண்மையிலேயே மூடப்பட்டிருக்கிறதா? இன்று வரை மூடவில்லை என மக்கள் என்னிடம் கூறினர். உடனடியாக ஆய்வு செய்து பாருங்கள், மூடவில்லை எனில் மக்கள் நம்பிக்கையை இழந்துவிடுவார்கள்
தேர்தல் பரப்புரை போல இல்லாமல், ஆக்கப்பூர்வமாக முதலமைச்சர் விஜய் பேசவும், செயல்படவும் வேண்டும். விவசாயிகளுக்காக கடன் தள்ளுபடி அறிவித்தார்கள். எந்த விவசாயியாவது மகிழ்ச்சியாக இருக்காங்களா? நிறைவேற்ற முடியும்னா மட்டும்தான் வாக்குறுதி தரணும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததால் தவெக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளனர். அறிவித்தப்படி பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படாததால் விவசாயிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். தவெக அரசு அறிவித்தபடி, ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று கொடுக்கப்படவில்லை. தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு பிரச்னை Peak-ஆ போய்ட்டு இருக்கிறது” என்றார்.

