தூய்மை பணியாளர்களுக்கு உணவு கொடுத்தால் மட்டும் போதாது... பிரேமலதா விஜயகாந்த்

 
Premalatha Premalatha

மதுரையில் நடைபெறும் பூத் கமிட்டி கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார்.

premalatha vijayakanth

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “இன்று மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் மதுரையிலிருந்து ஆரம்பித்து டிசம்பர் 2ஆம் தேதி வரை ஈரோட்டில் நடைபெற உள்ளது..தமிழ்நாட்டு முதலீடு ஆந்திராவிற்கு சென்றதை நான் கவலையுடன் தான் பார்க்கிறேன். இது போன்ற திட்டங்கள் எல்லாம் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும். அப்போதுதான் நிறைய இளைஞர்கள் வேலை வாய்ப்பு தர முடியும் நமது நாடு முன்னேற்றத்திற்குச் செல்லும். இதற்கு உரியவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். வருங்காலத்தில் பெரிய திட்டங்கள் தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்று தான் தேமுதிகவின் நிலைப்பாடு. வாக்குப்பதிவில் பல ஆண்டுகளாக முறைகேடு நடைபெறுகிறது. தேர்தல் ஆணையம் தான் உறுதியாக நிலைப்பாடை எடுத்து. ஜனநாயக நாட்டில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடக்க வேண்டும். 

கூட்டணி குறித்து கடலூர் மாநாட்டில் முடிவெடுக்கப்படும். தூய்மை பணியாளர்களுக்கு உணவு கொடுப்பதால் மட்டுமே அவர்களது தேவை பூர்த்தி ஆகாது. அவர்களது தேவை பூர்த்தி செய்ய வேண்டும்” என்றார்.