“கூட்டணி ஆட்சி வரவேற்கதக்கது... ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியதில்லை”- பிரேமலதா விஜயகாந்த்

 
பிரேமலதா விஜயகாந்த் பிரேமலதா விஜயகாந்த்

சென்னையில் நடைபெற்ற காங்கிரஸ் நிர்வாகியின் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டதற்கும், கட்சி மற்றும் கூட்டணிக்கு எந்த தொடர்பும் இல்லை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தேமுதிக பொதுசெயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “சென்னையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்று வரும் புத்தக வெளியீட்டு விழாவில், தேமுதிக பொருளாளர் எல்.கே.சுதீஷ் கலந்து கொண்டதற்கும், கட்சிக்கும் எந்த சம்மந்தமும்  இல்லை. நண்பர் என்ற முறையில் விழாவில் பங்கேற்க பத்திரிக்கை வழங்கினார்கள். இதுக்கும் கூட்டணிக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழகம் முழுவதும் 8 மண்டலங்களாக பிரித்து நிர்வாகிகளுடன் இணைந்து, அனைத்து மாவட்டங்களிலும் பூத் கமிட்டி அமைப்புகள் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. கட்சி வளர்ச்சிக்கு கவனம் செலுத்தி பணியாற்றி வருகிறோம். வரும் ஜன.9 ஆம் தேதி கடலூரில் நடைபெறும் மாநாட்டில் கூட்டணி தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்படும். தேசிய ஜனநாயக தலைமையில் கூட்டணி அமையும் என சொல்லியுள்ளனர். தமிழக கட்சிகளின் தலைமையில் ஆட்சி இருந்தால் நல்லது. கூட்டணி ஆட்சி இருந்தால் வரவேற்கத்தக்கது. ஒரே கட்சியிடம் ஆட்சி அதிகாரம் இருக்க வேண்டியதில்லை.

அதிகாரம் ஒரே மையத்திற்கு செல்லாமல் பகிர்வு செய்து மக்களுக்கு நல்லது செய்யலாம். எத்தனையோ மாநிலத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியமாகி உள்ளது. பல்வேறு போதை கலாச்சாரத்தில் தமிழகம் மூழ்கி உள்ளது. நடிகர்கள் 2 பேர் மட்டுமே போதைப்பொருள் பயன்பாடு என்பது தவறு. அரசியல் கட்சி என்றால் கூட்டணிக்கு அழைக்க தான் செய்வார்கள், முடிவை விஜய் தான் எடுப்பார். அதிமுக ராஜ்சபா சீட் வழங்குவதாக கூறியது உண்மை, எழுதி கொடுக்கப்பட்டது உண்மை, ஆனால் 2026 தான் என கூறியுள்ளனர். ஆனால் அதற்கும், கடலூர் மாநாடு அறிவிப்புக்கும் எந்த தொடர்பும் இல்லை. நாங்கள் கட்சியின் பலத்தை காட்டுவதில் தான் கவனம் செலுத்தி வருகிறோம்” என்றார்.